தலித்துகளின் உரிமைக்குரலை கம்பீரமாய் முழங்குகிறது இந்தப் பாடல் . இரைஞ்சும் தொனியை தவிர்த்து உலுக்கும் வரிக்ளோடிருப்பதால். இப்பாடலை பல மேடைகளில் விருப்பத்தோடு பாடியிருக்கிறேன்.
நீண்ட நெடுங்காலமாய் காத்திருக்கிறோம் - நாங்கள்
நெஞ்சுக்குகுழியில் வாழும் கனவைத் தேக்கி நிற்கிறோம்
ஏற்றத்தாழ்வின் துயரங்களை தாங்கிச் சாவதோ?- சம
நீதியென்னும் ஆயுதத்தை ஏந்திப் பிடிக்கிறோம்
(நீண்ட)
சேரி மக்கள் என்னும் இழிவை தூக்கி எறிகிறோம்
மநுநீதி இழைத்த கொடுமையினை எரிக்க வருகிறோம்
சேர்ந்து வாழும் புதிய வாழ்வை முன்மொழிகிறோம் - அதை
ஏற்கும் மக்கள் யாவரோடும் கரமிணைக்கிறோம்.
ஆண்டைகளின் ஏவல்களை ஏற்க மறுக்கிறோம்- நாங்கள்
அடங்க மறுக்கும் அலையைப்போல குமுறி எழுகிறோம்
இயற்கை வளங்கள் யாவின் மீதும் உரிமை கேட்கிறோம் -அதை
எதிர்த்து மறிக்கும் யாவரோடும் போர் தொடுக்கிறோம்
(நீண்ட)
பொதுக்கிணற்றில் நீரருந்த பொங்கிப் பாய்கிறோம் - எங்கள்
புழுதி படிந்த கால்களாலே ஊரை அளக்கிறோம்
புனிதம் தீட்டு யாவின் மீதும் காறி உமிழ்கிறோம் - அந்த
புரட்டுகளை எட்டி உதைத்து விரட்டி அடிக்கிறோம்.
வரலாற்றின் நெடுந்தடத்தில் தனித்தே நடந்தோம் - எங்கள்
வாழிடமாம் சேரிகளை சிறையாய் உணர்ந்தோம்
பரம்பரையாய் ஒடுக்குமிந்த சாதி அடுக்கினை
எங்கள் பாட்டாலும் ஜோட்டாலும் அடித்தே தகர்ப்போம்
- ஆதவன் தீட்சண்யா

good one.
ReplyDeletewomen's day wishes kavin.
:-)
thank you adhiran!!!
ReplyDeleteகவின் நலமா? மனுசங்கடா... நாங்க மனுசங்கடா பாடலுக்குப்பின் ஆதவன் கவிதை மனதைத்தொட்டது...கவின் இந்தமாதம் 31-3-2011 அன்று எனது பி.எஸ்.என்.எல். பணிக்கு ஓய்வு.... இனி என்ன செய்வது..? 350 ச.அடி.வீட்டைத்தவிர...
ReplyDeleteகவின்,
ReplyDeleteசுகந்தானே. அன்றைக்கு இதை நீங்க பாடக் கேட்டிருக்கலாம்...அடுத்ததடவை....
மதுபாஷினி
Where get this Songs CD kindly give the address or Mobile No and Amount or send SMS to following Mobile 7373222244
ReplyDelete@all
ReplyDeleteநன்றி! மிக்க நன்றி!
@traditional
கோவையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட ஒலிப்பேழையில் வெளிவந்துள்ள பாடல். அருகில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் விசாரித்துப் பாருங்கள்.