Tuesday, June 01, 2010
சீமானுடன் ஒரு கலைந்துரையாடல்
நான் பணிபுரியும் பத்திரிகையின் முதல் இதழ் வெளியாவதற்கு முன்பு இரண்டு இதழ்கள் நாஙக்ள் தயாரித்தோம். அவை தனிச்சுற்றுக்கு மட்டும் விடப்பட்டன. கடைகளில் விற்பனைக்கு வரவில்லை. இவற்றில் முதல் இதழுக்காக இயக்குநர் சீமானோடு கல்லூரி மாணவர்களின் உரையாடல் ஒன்றை தொகுத்தளித்தேன்.2009 ஜூலை மாதத்தில் நடந்த கலந்துரையாடல் இது. விற்பனைக்கு இதழ் வராததால் நிறைய பேர் பேட்டியை படித்த்திருக்க வாய்ப்பில்லை.அவர்களுக்காக.....
மேடைக்கு முன் மக்கள் கூட்டம். மைக்கில் தமிழ்ச் சமூகத்தை விளாசு விளாசு என்று விளாசுகிறார். அவ்வபோது கண்கள் சிவந்து கோபம் கொப்பளிக்க பேசுகிறார். வேறு யார்? நம்ம சீமான்தான். எப்போதுமே அரசியல் கட்சிகளையும், ஆட்சியாளர்களையும், மக்களையும் அவர் மட்டும்தான் கேள்வி கேட்க வேண்டுமா என்ன? சென்னை லயோலா கல்லூரி ஊடகக் கலைகள் துறையின் மாணவர்கள் கிளரன்ஸ், ஜெயசந்திர ஹஷ்மி, புஷ்பராஜ், மாநில கல்லூரியின் ஆராய்ச்சி மாணவி ரேவதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவி கவியரசி, மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்த சித்ரா ஆகியோர் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். அவர்களது கேள்விக்கணைகளும் சீமானின் சளைக்காத பதில் களுமாக களை கட்டியது ஒரு மாலை நேரம். அவரது வளசரவாக்கம் வீட்டின் மாடியில் கீற்று வேயப்பட்ட குடிலில், பிரம்பு நாற்காலியில் அமர்ந்தபடி, ஒருபுறம் சேகுவேரா, மறுபுறம் பிரபாகரன் படங்கள் சகிதம் தேநீரோடு தொடங்கியது சந்திப்பு.
இப்போதெல்லாம் நடிகர்கள் திடீரென்று அரசியலுக்கு வந்து விடுவது பற்றி என்ன நினைக்கிறீங்க?
”அரசியலுக்கு யாரும் வரலாம். சினிமா அவங்களுக்கு முகவரி அட்டையைத் தருது. எளிதான அறிமுகம் கிடைக்குது. நீண்டகாலம் சமூகத்திற்காக உழைத்த மிகப்பெரிய தலைவரைவிட ஒரு திரைக்கலைஞன் சுலபமாக புகழ் பெற முடியுது. ஆரோக்கியமான சினிமா வர ஆரம்பித்தால் இதற்கெல்லாம் வாய்ப்பில்லை. நம் தமிழ்நாட்டு மக்களை நம்பமுடியாது. கேரளாவில், மேற்கு வங்கத்தில் ஆரோக்கியமான சூழல் இருக்கு. அங்கே அரசியல் வேற, திரைப்படம் வேற என்ற புரிதல் மக்களிடம் இருக்கு. மக்களிடம் ரொம்ப புகழ் பெற்ற நடிகர் கூட அங்கே அரசியலுக்கு வரமுடியாது. இங்கே அப்படிக் கிடையாது. பாலூத்துறது, கும்பாபிஷேகம் செய்றது, தீக்குளிச்சு சாகுறது இப்படி எல்லை மீறிப் போயிடுச்சு. இதையெல்லாம் மாணவர்களாகிய நீங்கதான் மாத்தணும்”
மக்களின் அறியாமையை சினிமாக்காரங்க தப்பாக பயன்படுத்திக்கிறாங்கன்னு சொல்லலாமா?
”ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு. பார்வையாளர்கள் நிராகரிச்சா நாங்க தப்பா படம் எடுக்க மாட்டோம். உங்களைப்போல மாணவர்கள்தான் நிறைய படம் பார்க்குறீங்க. ஒரு குத்துப்பாட்டு திரையரங்கத்தில் ஓடும்போது அதை ரசிக்காம எழுந்து வெளியில போனீங்கன்னா படம் ஓட்டுறவரே அடுத்த காட்சிக்கு அதை வெட்டி எறிஞ்சுடுவார். அதை விட்டுட்டு நீங்க பாட்டுக்கு விசில் அடிச்சு அந்த பாட்டை ரசிச்சீங்கன்னா தொடர்ந்து இப்படித்தானே பாட்டு வரும்?. நீங்க சீட்டி அடிச்சுல்ல ரசிக்கிறீங்க!”
எங்க கல்லூரி சார்பா ஒரு கருத்துக் கணிப்புக்காக ஒரு கிராமத்துக்கு போனப்போ முதலமைச்சர் எப்படி இருக்கணும்னு நினைக் கிறீங்கன்னு கேட்டபோது ஒருத்தர் ‘முதல்வன்’ அர்ஜுன் மாதிரி இருக்கணும்னு சொன்னார். இதை நீங்க எப்படி பார்க்கறீங்க?
“திரைப்படத்தில் கதாநாயக வழிபாடு நிறைய இருக்கு. கற்பனையில் உதித்த கதாபாத்தி ரங்களை காப்பியங்களில் வருவது போல அவதார புருஷர்களாக, தேவதூதர்களாக மக்கள் பார்க்கிறாங்க.கொலை பண்றவணும் படம் பார்த்துதான் கொலை பண்ணேன்னு சொல்றான். கல்யாணம் பண்றவனும் படம் பார்த்துதான் கல்யாணம் பண்ணேன்னு சொல்றான். நதியா வந்தப்போ நதியா வளையல், நதியா பொட்டுன்னு நிறைய வந்தது. ஆட்டோகிராப் படம் வந்தப்போ ஆட்டோகிராப் சேலைன்னு வந்து வித்துது. திரையில் சிரிச்சா மக்கள் சிரிக்கிறாங்க. அழுதா அவங்களும் அழுறாங்க. மக்கள் நல்ல விஷயங்களையும் எடுத்துக்குறாங்க. கிழக்குச் சீமையிலே படப்பிடிப்பு சமயத்தில் ஒரு கிராமத்தில் சாதிக் கலவரம். எல்லா மக்களும் அரிவாளோடு ஓடுறாங்க. ஒரு பத்து பேர் மட்டும் போகலை. ஏன்னு கேட்டப்போ ‘தேவர் மகன் படம் பார்க்குறதுக்கு முன்னாடி நாங்களும் இப்படித்தான் இருந்தோம். அதற்க்குபின்னாடி தப்புன்னு தோணிடுச்சு’னு சொன்னாங்க. ஆக, அந்த பத்து பேரை தடுத்த பெருமை ஒரு சினிமாவுக்குத்தான். அதனால்தான் சினிமா பொழுதுபோக்கு இல்லைன்னு சொல்றேன்.”
மசாலாத்தனம் இல்லாத சினிமா சாத்தியமா?
“சாத்தியம்தான். இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பŒங்க, நா@டாடிகள் @பான்ற படங்களே சாட்சி”
‘பசங்க’ படத்தை யதார்த்தம் என்று எப்படி சொல்றீங்க? டீன் ஏஜ் வயசுப் பையங்களின் கதையை குழந்தைகள் மேல திணிக்கிறது எப்படி யதார்த்தம்னு சொல்ல முடியும்? இரானிய திரைப்படங்களில் எல்லாம் குழந்தைகளுக்கான படங்கள் இப்படியா வருது?
“ஒண்ணு தெரிஞ்சுக்குங்க! இரானில் 12 வயசுக்கு மேற்பட்ட அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவங்களை மட்டுமே திரையில் காண்பிக்கணும். இடைப்பட்ட வயதில் உள்ள பெண்களை திரையில் காண்பிக்கக் கூடாதுன்னு சட்டமே இருக்கு. அதனால் அவங்க கதையை யோசிக்கும்போதே அதற்கேத்தமாதிரி யோசிக்கிறாங்க. ‘பசங்க’ படத்தில் வருவது போல நிஜத்தில் நடக்கலையா என்ன? இது மாதிரி படம் பண்றதே ஒரு அதீத முயற்சி. அதுலயும் குறை சொல்லி கவுத்துறாதீங்க. சும்மா எதுக்கெடுத்தாலும் ஹாலிவுட், இரான்னு போய் நிக்கக் கூடாது. அவங்களுக்கு உலக சந்தை. எங்களுக்கு நாலைஞ்சு மாவட்டம்தான். இங்கே நமக்கென்ன முடியுமோ அதைத்தான் நாம செய்ய முடியும். அதுலயும் குறை சொல்லி இது மாதிரி முயற்சிகளையும் தடுக்காதீங்க.”
திரைப்படங்களில் பெண்களை மிக மோசமாக சித்தரிக்கிறாங்களே?
“படங்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக வணிகரீதியாக சில விஷயங்களை தோல்விபயத்தில் சேர்க்கிறார்கள். அது தேவை இல்லை என்பது இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கு.”
தமிழ்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழக அரசு வரிவிலக்கு அளிப்பதை எப்படி பார்க்கறீங்க?
“அப்படியாச்சும் இவங்க தமிழில் பெயர் வைக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாசையில அப்படி அரசாங்கம் அறிவிச்சுது. நாங்ககூட தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடங்கினோம். ஆனால் இங்கே என்ன நடக்குது? தமிழில் தலைப்பு மட்டும் வைச்சுட்டு உள்ளே பூராவும் முழுக்க முழுக்க ஆங்கிலம். உலகத்திலேயே எம்.நாகராசு என்று ஆங்கிலத்தில் தனது முதல் எழுத்தை போட்டுக் கொள்பவன் தமிழனாகத்தான் இருப்பான். ம.நாகராசு அல்லது மு.நாகராசுன்னு போட்டா குறைஞ்சுடுமா? சா..பூ..த்ரீன்னு ஒரு படம். இது என்ன மொழின்னே தெரியலை. என்னைக் கேட்டால், தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதைவிட தமிழில் பெயர் வைக்காத படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்கலாம். பாடல்களில் பிறமொழி கலப்பு அதிகமா இருக்கு. பெண்ணின் தொடையை காண்பிப்பதுதான் ஆபாசம் என்றில்லை. சண்டைக் காட்சிகள்தான் வன்முறை என்றில்லை. இந்த மொழிக் கலப்புதான் மிகப்பெரிய ஆபாசம்; வன்முறை. நான்கூட வாழ்த்துகள் படத்தில் பிறமொழி கலப்பில்லாமல் செய்திருந்தேன். ஆனா அதை மக்கள் வரவேற்கலையே! படம் தோல்விதான். தூயதமிழ் அவங்களுக்கு ஏனோ அந்நியமா தெரியுது. தமிழர்களிடமிருந்து தமிழ் தூரமாகி விட்டது. ‘சாயங்காலம் கூப்பிடுறேன்’ இப்படி சொன்னா புரியாதா? ‘ஈவினிங் கால் பண்றேன்; கை பண்றேன்’னாத்தான் புரியுமா? வாக்கு அரசியல் முக்கியமாக ஆகிட்டதால வாக்கு வங்கி குறைஞ்சுடு மோன்ற பயத்துல பல பிழைகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை.”
உங்க ‘தம்பி’ படத்துல போராட்டம் தனியாகவும் குடும்ப வாழ்க்கை தனியாகவும் பிரிக்கிறீங்களே? அது எப்படிச் சரியாகும்? இரண்டும் ஒன்றாக இருப்பதுதானே நியாயம்? ‘படிச்சிட்டு பிறகு போராட வா’ என்று சொல்வது எப்படி சரி?
“இப்போ நான் சிறைக்கு போனேன். அப்பா அம்மா எல்லாருக்கும் என்னைப்பத்தி தெரியும். அதனால தாங்கிக்கிட்டாங்க. நானும் தாங்கிக்கிட்டேன். ஆனால் வேறு ஒரு படிக்கிற பையன் சிறைக்கு போறான்னு வைச்சுப்போம். அவனுக்கு எதிர்காலமே கேள்விக்குறியாகிடும். அவங்க வீட்டில், வெளியில் அவனை எப்படி பார்ப்பாங்கன்னு இருக்குல்ல? அவன் ஒருத்தன் சிறைக்கு போறதால அதை பார்த்து பயந்து போராட வர துடிக்கும் ஆயிரம் பேர் தயங்குவாங்க. படிச்சிட்டு அதிகாரியா இருந்தா, சமூகத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்பதெல்லாம் சும்மா. அரசு அதிகாரியா இருக்குற இறையன்பு தனது துறையில் எல்லோரையும் கணிப்பொறிக்கு மாற்றி இருக்கிறார். கைப்பந்து பயிற்சி கொடுக்கிறார். இப்படி நல்லா படிச்சு அதிகாரியா இருந்தாலும் தனது அதிகாரத்திற்குட்பட்டு நல்லது செய்யலாம்தான்.”
அப்போ செட்டிலாகிட்டு போராடிக்கலாம்னு சொல்றீங்களா?
“அப்படி இல்லை.என் ஒருவனால 10 பேர் சாதிப்பது தடைபடக்கூடாது. எல்லோரும் என் பின்னாடி போராட வாங்கன்னு கூப்பிட்டால் நான் சுயநலவாதி ஆகிடுவேன்.”
முத்துக்குமார் தீக்குளித்த பிறகு எழுந்த மாணவர் போராட்டம், முதலில் படிப்பு பிறகு போராட்டம் என்ற அடிப்படையில்தான் கை விடப்பட்டதா?
“மாணவர்கள் மிக அர்ப்பணிப்போடு போராடினார்கள். ஆனாலும் கூட ஒரு கட்டத்துக்கு மேல் அந்தப் போராட்டம் செல்லவில்லை.காலவரையின்றி கல்லூரிகளை மூடியபிறகு போராட்டம் என்ன ஆனது? வகுப்புகளுக்கு போகும் வாய்ப்பு இருக்கும்வரை போராட்டம் இருந்தது. வீட்டுக்கு போன பிறகே என்ன ஆனது? அதுதான் யதார்த்தம். இதுலகூட பார்த்தீங்கன்னா சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்தது போல் மருத்துவ மாணவர்கள் ஏன் வரலை?”
இரண்டு வருஷத்துக்கு முன்னால் இதே போல் அரசாங்கம் காலவரையற்ற விடுமுறை விட்டபோது, ஹாஸ்டல் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வகுப்புக்குப் போக மறுத்தாங்க. அது போல் ஏன் இந்த விஷயத்தில் நடக்கலை?
“முத்துக்குமார் தீக்குளித்ததற்கு பிறகு அனைத்து மாணவர்களும் ஓடிவந்து அமைப்பு துவங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். உணர்வுகள் அதிகமாக இருக்கையில் அவர்கள் போராடினார்கள். இப்போது என்ன ஆச்சு? கலைஞ்சு போச்சு. திரும்ப அவங்களை கூப்பிடணும். வழிகாட்டணும். இருக்கும் தளத்தை போராட்டக்களமாக மாற்றணும்.”
உணர்வுரீதியாக திரளும் கூட்டம் இப்படித்தான் ஆகும். ஏன் நீங்க மேடையில் பேசும்போது இவ்வளவு உணர்ச்சிவசப்படுறீங்க? உங்களை பின்பற்ற நினைப்பவர்களையும் உங்களின் இந்த குணம் தாக்காதா?
“அங்கே தமிழன் ஈழத்தில் செத்துக்கிட்டு இருக்கும்போது இங்கே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடக்கும் கிரிக்கெட் போட்டியை சாலை ஓரக்கடையில் நின்னு வேடிக்கை பார்த்தா எப்படி? எனக்கு உணர்ச்சி இருக்கு. அதனால் உணர்ச்சிவசப்படுறேன்.எதை எப்படி பேசணுமோ அப்படித்தான் பேசணும். உண்மையை பேசும்போது உரக்கத்தான் பேசணும் நான் அங்கே உள்ள எனது மக்களோடு இருக்கிறேன்.இது எனது போராட்டம். அதனால் என் பேச்சு அப்படித்தான் இருக்கும். இழவு வீட்டில் ஏன் கதறி அழறேன்னு கேட்டா எப்படி?”
இங்கே ஈழம் பற்றி பேசுபவர்கள் ஒருமுறையாவது இலங்கை அகதிகள் முகாமிற்குச் சென்று பார்த்தீங்களா? இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் முதலில் பூர்த்தியாகி இருக்கிறதா என்று யாரவது பார்த்தீங்களா?
“அவர்கள் மேல் அக்கறையோடுதான் இருக்கிறோம். அவர்களுக்குச் சரியான கழிப்பறை கூட இல்லை. கழிவறை கட்டுவதற்காக சிலரிடம் நன்கொடைக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். அவர்களுக்கு செய்யணும். சேர்ந்து செய்யணும். அகதிகள் முகாமில் இருப்பவன் உயிரோடிருக்கிறான். அங்கே செத்துக் கொண்டிருக்கிறான். எந்தச் செடி வதங்கி நிற்கிறதோ அதற்குதான் முதலில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.”
தமிழ்த்தேசியம் பேசும் நீங்கள் ஏன் தலித்தியம் பேசுவதில்லை? அந்த மக்கள் உங்க கண்களுக்கு தெரியலையா?
“நீங்கள் ஏன் சேரியிலேயே கொண்டுபோய் பிரச்சனையை நிறுத்துகிறீங்க? நாங்க ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் பேசுறோம். சாதியை மறந்து தமிழன் என்று ஒரு சாதியாய் இணைவது பற்றி பேசினால் நீங்க திரும்பத் திரும்ப கொண்டு போய் சேரியில் நிறுத்துறீங்க. சாதியை மறந்து வாங்க! பிறகு பாருங்க!”
தமிழனுக்கு தனி நாடு கிடைத்துவிட்டால் போதுமா? சாதிய ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் தீர்ந்து விடுமா என்ன?
“நீங்க தீராதுங்குறீங்க. நான் தீரும்னு சொல்றேன். நீங்க நம்பிக்கையற்று பேசுறீங்க. முதலில் சாதியை மறந்து ஒன்றுபடுங்க! பிறகு பாருங்க! சாதிக்குள் நின்று தமிழ்த் தேசியம் பேசினா கஷ்டம். முதலில் அடைய வேண்டியது விடுதலை. அதன் பிறகுதான் சாதி, மதமெல்லாம் வருது.”
நீங்க தேர்தல் பிரசாரத்துக்குப் போன போது ‘ஈன சாதி’ என்று ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கீங்க. உங்களுக்குள் சாதி வித்தியாசம் பார்க்கும் குணம் இருப்பதால்தானே இப்படி பேசினீங்க?
“ஈன சாதி என்றால் அசிங்கமான பிறவி, இழி பிறவி என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். நீங்கள் சொல்லுவது போல் நான் அந்த பார்வையில் பேசவில்லை. இந்திய இலங்கை கிரிக்கெட் பந்தயத்தை பார்த்து ரசிப்பவனைப் பற்றி பேசும்போது ஆத்திரத்தில் தாங்க முடியாத வேதனையில் வந்த சொல் அது. பிரணாப் முகர்ஜியை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வாங்கன்னு கெஞ்சுறோம். அவங்க கிரிக்கெட் அணியை அனுப்புறாங்க.கோபம் வராதா?”
பிரபாகரனை அடிக்கடி சந்தித்து இருக்கீங்களா?
“அடிக்கடி சந்திக்க முடிந்தால் அவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?”
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? ஒரே புதிராய் இருக்கே?
“அது கொஞ்ச நாளைக்கு யூகமாகவே இருக்கட்டுமே!”
Labels:
கலந்துரையாடல்,
சீமான்,
நேர்காணல்,
பேட்டி,
மாணவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
பகிர்விற்கு நன்றி...!
ReplyDeleteசாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடும் தென்மாவட்டத்தில் பிறந்த சீமான், சாதிப் பிரச்சனை பற்றி கேட்டால் சமாளித்துப் பேசுகிறார். ஒரே மொழி பேசக்கூடிய தமிழன்தான் நீ கீழ் சாதிக்காரன் செருப்பு போடக்கூடாது. எங்கள் தெருவுக்குள் நடக்கக்கூடாது என்கிறான். எங்கே இருக்கிறது ஒற்றுமை.
ReplyDeleteசெம்ம வாங்கு வாங்கியிருக்கீங்க... ஆனா இது “புதிய தலைமுறைக்கு” எடுக்கப்பட்ட பேட்டிதானா?
ReplyDelete@விக்னேஷ்
ReplyDeleteஆமாம். வந்தீங்கன்னா ஒரிஜினல் இதழ் காப்பி தருகிறேன்
“அது கொஞ்ச நாளைக்கு யூகமாகவே இருக்கட்டுமே!”
ReplyDeleteநாட்களா? வருடங்களா?
நன்றாக உள்ளது.
ReplyDeleteசீமானின் பற்றிய எனது தவறான எண்ணம் கொஞ்சம் மாறி உள்ளது.
சில கருத்துக்கள் பொட்டிலடித்தார் போல் உள்ளது.
ரொம்ப மகிழ்ச்சி.........ஜாதி இல்ல என்று சீமான் சொன்னதற்க்கு
ReplyDeleteசாதியை மறந்து தமிழன் என்று ஒரு சாதியாய் இணைவது பற்றி பேசினால் நீங்க திரும்பத் திரும்ப கொண்டு போய் சேரியில் நிறுத்துறீங்க. சாதியை மறந்து வாங்க! பிறகு பாருங்க!”
இனியொரு விதி செய்வோம்
இந்த பேட்டியின் மூலம் சீமானின் மனதை அறிந்தேன்.
ReplyDelete// எல்லோரும் என் பின்னாடி போராட வாங்கன்னு கூப்பிட்டால் நான் சுயநலவாதி ஆகிடுவேன்.//
இந்த வரிகள்தான் மற்றவர்களிடமிருந்து இவரை
வேறுபடுத்திக் காட்டுகிறது. அவருடைய முயற்சிகள் வெற்றியடையட்டும்.
நன்றி.
தமிழன் = சீமான்
ReplyDeleteஅட பதருகளா இன்னுமா சீமான நம்புறீங்க!!!!!!!
ReplyDeleteஇந்தவருட தேவர்ஜெயந்தி எனப்படும் உலகப்புகழ் பெற்ற விழா அன்று...10x15 அடியில் குடும்பியுடன் பூணூல் போட்டுகொண்டு கம்பீரமாக நிற்கிறார் Mr.முத்துராமலிங்கம் (உடம்பு உபயம் -தசாவதாரம் நம்பி) இதுதான் தேவர்மகன் , விருமாண்டி போன்ற படங்கள் ஏற்படுத்திய(உண்மையான) தாக்கம்....
அதவிட்டுப்புட்டு... ஊரே திரண்டு திடுதிடுன்னு அருவாலத்தூக்கிட்டு ஓடும்போது பத்துப்பேருக்கும் மட்டும்தான் தேவர்மகனுக்கு ticket கிடைத்தது போல பேசுவது உச்சகட்ட சீமான்தனம்...
தலித்துக்கள் என்றதும் சேரி சேரி என்று... சீமான இழுத்து சேத்துல தள்ளுனமாதிரி பேசுறாரே உழைக்கும் மக்கள் பின்னணியிலிருந்து வந்த மனுஷன் சே சே...
ஈனசாதி என்ற சொல்லாடல் எந்தச் சூழ்நிலையிலும் தலித்து மக்களின் வாயிலிருந்து ஒருபோதும் வந்துவிடாது என்பதையும், சீமானின் வாயிலிருந்து யாரத் திட்டுவததற்காக வந்தாலும் அவரின் உளவியல் பின்னணியை கவனித்தில் கொள்ள வேண்டும்.... இவை எல்லாவற்றையும் தாண்டி சீமானை நான் புரிந்துகொண்டேன் காதல்கொண்டேன் என்று கடிதம் எழுதினால், உங்களுக்குள்ளும் இருக்கும் சாத்திய நாயை pizza போட்டு வளர்த்துக்கொண்டு வருகிறீர்கள் என்றே அர்த்தம்...
சொந்த ஊர்ப்பிரச்சனையில் எங்களுக்கு தலித்துக்கள் என்று பெயர்வைத்துவிட்டு ,கேரளாகாரனையும் இந்திகாரனையும் சிங்களவனையும் பார்க்கும் போது மட்டும் தமிழர்களே ஒன்றுகூடுங்கள், தமிழர்களே ஒன்றுகூடுங்கள் என்றால் எங்களுக்கு எப்படி கேட்கும் ... போராட்டம் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல....
பார்பானியத்தை ஏற்காமல் வர்ண அடுக்கில் அடங்க மறுத்து , தன் மொழி, தன் பண்பாடு, தன் நிலம் என்று கடைசிவரை போராடிய மக்கள்தான்... அந்த நால்வர்ண அடுக்கிலுருந்தும் தள்ளிவைக்கப்பட்டு தாழ்த்தப்பட்டனர்...
இதற்கிடையில் பார்பானிய பீயைத்தின்று உயர் சாதி என்று ஏப்பம் விடுபவர்கள், தாழ்த்தப்பட்டோரை போராட அழைப்பதுதான் உச்சகட்ட காமெடி.....
தோழமையுடன் மதியவன்...
இன்னும் கொஞ்சம் சீமானைப் பற்றி
http://www.facebook.com/notes.php?id=1207368271¬es_tab=app_2347471856#!/note.php?note_id=107890799276833
ada saathi veri pidichavnungala........muthalla veedu da appurama koorai ootai adaikkalam.......veedae illa neeeyellam kooraila ottai adaikkiratha pathi pesittu irukka
ReplyDeleteevan setha enna thalitha mathinga athuthaane venum unakku
muttalae padichu munneru da
padichu munnerina un jathi ennanu evanum kekka mattan
unga nelamaikku neengathaanda kaaranam
ippadi sanda podama padichu mnnerungada ellathulayam ida othukeedu vachukittu innum yenda pesi pesiyae veena poreenga.........
arumai
ReplyDeleteஅருமையான கலந்துரையாடல், நன்றி.
ReplyDeleteசாதியை விடுங்க, விடுங்கன்னு பெரியார் சொன்னலும் சரி, சீமான் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் நீங்க கேட்ட போறதில்ல.
அதையே பின்பற்றுங்க மதியவன்.
NICE. WE SHOULD ALL SUPPORT SEEMAN...
ReplyDelete