Friday, May 21, 2010

உங்கள் நினைவஞ்சலிகள் தறபோது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிப்பதற்காக வருந்துகிறோம்

உங்கள் நினைவஞ்சலிகள் தறபோது  ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காக வருந்துகிறோம். இப்போதைய சூழலில் எங்கள் வலி, நம்பிக்கை இரண்டுமே உங்கள் இரங்கலை எதிர்த்து நிற்கின்றன. எங்களுக்கு வழங்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான, எங்களுக்கு தேவைப்படுவதும், தேவைப்படாததுமான உஙகளின் இரங்கல் செய்திகளை எக்காரணத்தை முன்னிட்டும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் நடந்தவற்றையோ, நடக்கவிருப்பவற்றையோ அவை எதுவும் செய்யப்போவதில்லை.
எங்களின் இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் விளக்கவல்ல ஆற்றல் இரஙகலுக்குக் கிடையாததால், ‘நினைவஞ்சலிஎன்ற சொல் எங்களுக்கு அதிர்ச்சியை ஊட்டுகிறது.
வெளிச்சத்தில் நாங்கள் எங்கள் இல்லஙக்ளை விட்டு வெளியேறினோம்;  இருளில் எங்கள் இல்லங்களிலிருந்து மறைந்து போனோம்; வாழ்க்கைப் பாதை மாறுமென்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பங்களை விட்டு தூர வெளியேறி ஆயுதங்களை நோக்கி நடந்தோம்; தற்போது பூமியில் நாங்களே கண்டறிய முடியாத இடங்களுக்குள் எங்கள் உடல்கள் நுழைந்ததால் வெடித்துச் சிதறி துகள் துகளாய் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறோம். இங்கே நாங்கள் செத்துக்கொண்டும், உயிரோடும்  இருப்பதால் உஙகள் தொண்டைக்குழிக்குள் பேயாக சிக்கிக்கொண்டு வெளிப்படாமலிருக்கும் உஙகள் இரங்கல் வார்த்தைகளுக்குப் பின்னும் நாங்கள் வாழ்வோம்.
விரும்பியும் விரும்பாமலும் அடுத்தவர்களின் போர்களில் நாங்களும் இணைந்தோம்; நாங்கள் செல்ல வேண்டிய பாதை மிக அருகிலிருந்த போதும் அடுத்தவர்களின் பாதையில் முன்னேறி நடந்தோம்; நாங்கள் உதிரிகளாய் இருந்தோம்; முக்கியமானவர்களாய் இருந்தோம்; நாஙகள் நண்பர்களாய் இருந்தோம்; பகைவர்களாய் இருந்தோம்; நாஙகள் பிரச்சினைக்குரியவர்களாய் இருந்தோம்; எண்ணிக்கையிலடஙகாதவர்களாய் இருந்தோம்; இச்சிறிய நாட்டில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; இச்சிறிய உலகில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; உங்கள் மக்கள் நாங்கள்; உங்கள் மக்களல்லாதவரும் நாங்கள்.
நீங்கள் எங்களை நினைவுகூர்வீர்கள் என்று உங்களுக்காக காத்திருக்க முடியாது
நாங்கள் அழிந்தோம்; வாழ்ந்தோம்; அழிவதற்கும் வாழ்வதற்கும் நாங்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள், அழிவதற்கும் வாழ்வதற்கும் அதிகமானோரும் நாங்கள். எங்களில் சிலருக்கு குறைவான பணமும், குறைவான உணவும் இருந்தது; எங்களுக்கு பிள்ளைகள் இருந்தனர்; விரும்பியும் விரும்பாமலும் எங்கள் பிள்ளைகளை இழந்தோம்; எங்கள் கரங்களிலிருந்து அவர்கள் கிழித்து எடுத்துச்செல்லப்பட்டார்கள்; அவர்கள் எங்களோடிருக்க நாங்கள் போராடினோம்; அவர்களைக் காப்பாற்ற எஙகளிடமிருந்து பிரித்து எறிந்தோம்; அவர்களை நோக்கிய துப்பாக்கிக் குண்டுகளை எங்கள் உடலில் தாங்கி அவர்களுக்கு முன்பாக மரித்துப்போக எண்ணி அவர்களை எங்களின் பிடிக்குள் வைத்திருந்தோம்.
எங்களில் சிலர் மரித்தோம்;  ஆனால் எங்களில் சிலர் வாழ்ந்தோம்;  எந்த பிள்ளைகளை காப்பாற்ற நாங்கள் போராடினோமோ அவர்களின் காலத்திற்குப்பிறகும் அந்த நினைவுகள் எங்களுடன் வாழ்ந்தது..


போர் எனப்படும் இந்த ரத்தவெள்ளத்திலிருந்து வெளியேறும் வேகத்தில் எங்கள் செவிகள் நிலத்தில் வீழ்ந்துவிட்டன. எனவே உங்கள் இரங்கலை நாங்கள் செவிமடுக்க முடியாது. எங்கள் இருத்தல் நிமித்தம், எங்கள் விழிகளையும் மூடிக்கொள்ள நேர்ந்ததால் உங்களுக்குள் என்னவிருக்கிறது என்பதயும் காண இயலவில்லை.  பசியினாலும் கோபத்தாலும் எங்கள் வாயையும் மூடிக்கொண்டோம். எங்கள் குடும்பஙகளைப்பற்றி, நண்பர்களைப்பற்றி, தோழர்களைப்பற்றி, எங்களை வேட்டையாடிய, எங்களோடு ஓடிவந்த, எஙகளோடு மடிந்த தலைவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரிந்திருந்தது; தெரியாமலுமிருந்தது.
எல்லா திசைகளுக்கும் நாங்கள் முகங்கொடுத்தோம். எங்களில் சிலர் வாழ்ந்தோம். இன்னும் நாங்கள் இருக்கிறோம். உங்கள் இரங்கல் செய்திகள்  தறபோது  ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு வருந்துகிறோம்.
ஆங்கில மூலம் - வி.வி.கணேசநாதன்  http://vasugi.com/bio.html
தமிழில் : கவின் மலர்


4 comments:

  1. Anonymous7:58 pm

    இத்தனையும் நடக்கும்போது வாசுகி கணேசநாதனுக்கு எம் ஜே அக்பருடன் ஸ்ரீலங்கா அரசு பேருவல ஆடம்பரவிடுதியிலே வரவழைத்து விருந்து கொடுத்து அனுப்பியபோது, அமெரிக்காவிலே வந்து ஸ்ரீலங்கா அரசுசார்ந்த கூட்டங்களிலே கலந்து குரல் எழுப்பமுடிந்திருக்கிறது.

    இந்த அறிக்கை ஊடாகவும் அவர் நக்கல் செய்வது தமிழீழவிடுதலைப்புலிகளைத்தானே ஒழிய ஸ்ரீலங்கா அரசு பற்றிய விமர்சனம் ஏதுமில்லை. She is a part of Lanka Solidarity Group that promotes pro-sri lankan views in US. Go back and read in her blog itself.

    எந்த இழவும் யோசிக்காமல் நீங்கள் எடுத்துப்போடுவீர்கள். இதனை காப்பி பேஸ்ட் பண்ணியே வாழ்க்கையை ஓட்டும் சந்தர்ப்பவாதக்கும்பல் எடுத்துப் போடும்.

    வெட்கக்கேடு

    ------
    Head to Galle!
    http://www.sundaytimes.lk/090111/Magazine/sundaytimesplus_04.html

    Tickets are selling out fast for the year’s most exciting literary event- the Galle Literary Festival to be held from January 28 to Feb 1 (of 2009) at the Fort, Galle. The impressive array of local and foreign authors attending includes Germaine Greer, Colin Thubron, Pico Iyer, Anne Ranasinghe, V.V.Ganeshananthan, M.J. Akbar, Moses Isegawa, Romesh Gunesekera, Vivimarie Vanderpoorten and the event promises some stimulating exchanges and discussion amidst a whole host of complementary events.

    For more details and to book your tickets online, see the GLF website: www.galleliteraryfestival.com. Tickets are also available at Barefoot.

    The Sunday Times is the print media sponsor of the festival once again.

    http://www.sundaytimes.lk/090111/Magazine/sundaytimesplus_04.html
    -------

    ReplyDelete
  2. அனானி,

    இந்த கட்டுரையின் கருத்தில் உடன்பாடு இருந்ததால் போட்டேன்.
    உங்களுக்கு உகந்த மாதிரியே எல்லோரும் எழுத வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
    புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல.அவர்களுடைய தவறை ஒருவர் சுட்டிக்காட்டினால் இப்படி கொதிக்கிறீர்களே! விமர்சனத்தை ஏற்கப் பழகாத வரை தேவையில்லாத கோபங்கள் வரும்தான்.

    ReplyDelete
  3. http://www.penniyam.com/2010/05/blog-post_23.html

    ReplyDelete