கவிதைகள் செழித்து வளர்ந்த
அடர்வனத்தில்
சொற்கள் கிளைகளாயின
எழுத்துக்கள் இலைகளாகின
படிமங்கள் மலர்களாகவும்
வடிவங்கள் கனிகளாகவும்...
எவ்வளவு தேடியும்
தென்படவில்லை மொழிமட்டும்
களைப்புடன்
ஒரு கவியடியில் அமர்ந்தேன்
முகில் கருநிறமாதல்
மொழிக்கான அறிகுறியென்றது
உச்சியிலிருந்த சொல்லொன்று
உட்கூறுகளைக் காண விழைந்து
ஆயுதங்கொண்டு குறுக்காகப் பிளந்தேன்
அக்கவிதையை
நிலத்துடனான தொடர்பறுபட்டுக்
துண்டாகி வீழ்ந்தது கவி
மண்ணை ஆழத்தோண்டி
உற்று நோக்கினேன்.
துடித்துக்கொண்டிருந்தது வேர்
மொழியருந்தும் தாகத்துடன்
கவிதையின் உணர்வுகளாய்..
அடர்வனத்தில்
சொற்கள் கிளைகளாயின
எழுத்துக்கள் இலைகளாகின
படிமங்கள் மலர்களாகவும்
வடிவங்கள் கனிகளாகவும்...
எவ்வளவு தேடியும்
தென்படவில்லை மொழிமட்டும்
களைப்புடன்
ஒரு கவியடியில் அமர்ந்தேன்
முகில் கருநிறமாதல்
மொழிக்கான அறிகுறியென்றது
உச்சியிலிருந்த சொல்லொன்று
உட்கூறுகளைக் காண விழைந்து
ஆயுதங்கொண்டு குறுக்காகப் பிளந்தேன்
அக்கவிதையை
நிலத்துடனான தொடர்பறுபட்டுக்
துண்டாகி வீழ்ந்தது கவி
மண்ணை ஆழத்தோண்டி
உற்று நோக்கினேன்.
துடித்துக்கொண்டிருந்தது வேர்
மொழியருந்தும் தாகத்துடன்
கவிதையின் உணர்வுகளாய்..
Rasuthen
ReplyDeleteவித்தியாசமான..ஆனால் யதார்த்தமான சிந்திப்பு. மொழி எனப்படுவது மண்ணின் குழந்தை. தாயை இழந்த குழந்தைகளாய் எம் மொழியை மட்டும் சுமந்து பறக்கின்ற ஈழப்பறவையாய் உங்கள் வரிகள் நெஞ்சு தொடுகின்றன.
ReplyDeleteவித்தியாசமான..ஆனால் யதார்த்தமான சிந்திப்பு. மொழி எனப்படுவது மண்ணின் குழந்தை. தாயை இழந்த குழந்தைகளாய் எம் மொழியை மட்டும் சுமந்து பறக்கின்ற ஈழப்பறவையாய் உங்கள் வரிகள் நெஞ்சு தொடுகின்றன.
ReplyDelete